சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, December 26th, 2020

சுனாமி பேரலையின் போது உயிர் இழந்த உறவுகரைள நினைவுகூரும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அஞ்சலி மரியாதை செலுத்தரியுள்ளார்.

சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவையும், அதன்போது காவு கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானோரையும் நினைவு கூரும் வகையிலும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். அலுவலகத்தில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், கடற்றொழில் அமைச்சரை சந்திப்பதற்காக வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்

முன்பதாக 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பாரிய அழிவை ஏற்படுத்தியது.

இது வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக உள்ளதுடன், இன்றுடன் இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் இலங்கையிலும் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதில், கடற்றொழில் அமைச்சரை சந்திப்பதற்காக வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்

Related posts: