மக்களின் வேதனையில் சில ஊடகங்கள் இலாபம் ஈட்டின – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 22nd, 2017

கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் அமைக்கபட்டபோது, எமது மக்கள் அதீத எதிர்பார்ப்புகளுடன் சென்று, தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்தனர். ஒரு சிலர் சில சுயலாப சக்திகளின் தூண்டதல்களுக்கு எடுபட்டும், அறியாத் தனம் காரணமாகவும், தவறான தகவல்களை வழங்கியிருந்த சந்தர்ப்பங்களையும் ஊடகங்கள் சில பரபரப்புச் சந்தை விலை கருதி அவ்வப்போது வெளியிட்டிருந்த நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

அந்த வகையில் மேற்கண்ட ஆணைக்குழுக்கள் முன்பாக தங்களது முறைப்பாடுகளை, சாட்சியங்களைப் பதிவு செய்திருந்த எமது மக்களின் வேதனைகளை ஒரு சில ஊடகங்கள் தங்களது வர்த்தகச் சந்தைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே அன்றி, காணாமற்போனவர்களது உறவுகளுக்கு அதன் மூலமாக எவ்விதமான பயன்கள் கிட்டியிருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சிய்ன செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் 21 காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவுதல் தெடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வராத நிலையில், துயரத்தின் தீவிரம் அதிகரித்த நிலையில், வாழ்க்கையில் முன்னேற்ற நகர்வுகள் இன்றிய நிலையில்,எதிர்காலத்தை நினைத்து ஒரு அடி முன்னே எடுத்து வைக்க முடியாத நிலையில், ஒருவிதமான முடக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டு எமது மக்கள் அறவழிப் போராட்டத்தினை கடந்த 121 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது உறவுகள் காணாமற்போன ஒவ்வொரு குடும்பங்களும் காணாமற்போன அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே ஆவல் கொண்டுள்ளனர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.அல்லது, அவர்களது தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் பெறப்பட வேண்டும். அதுவரையில் அந்த குடும்பங்கள் உணர்வு, பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையானது தவிர்க்கப்பட இயலாதது.

அந்த வகையில், காணாமற்போனவர்கள் கண்டு பிடிக்கப்படும் வரை அல்லது அவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரும் வரை அவர்களது உறவுகள் காணாமற்போன உறவுகளைக் கண்டறிவது சார்ந்த பல்வேறு செயற்பாடுகளில் இறங்குவது இயல்பானதொரு விடயமாகும்.இவ்வாறானதொரு நிலையிலேயே காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் எமது நாட்டில் உருவாக்கப்படுகின்றது.

வெளிநாடுகளின் தேவைக்காக மேற்படி அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் ஒரு விமர்சனம் இருந்து வருகின்ற நிலையில், ஒரு குறிப்பட்ட தரப்பாரைத் தண்டிப்பதற்காகவே இந்த அலுவலகம் உருவாக்கப்படுகின்றது என்று ஒரு சிலரால் கூறப்படுகின்ற நிலையில்,நான் அடிக்கடிக் கூறிவருவதைப் போன்று எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்டையிலேயே நான் இந்த அலுவலகம் குறித்து பார்க்கின்றேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!
வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற...

இலகு வீடுகளை கேட்போருக்கு அதைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் உதவவேண்டும் - டக்ளஸ் தேவான்ந்தா பா.உ வேண்...
தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்ச...
ஊர்காற்றுறை - காரைநகர் இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!