டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட பிரச்சினைக்கு தீர்வு!

Tuesday, May 14th, 2019

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் காணப்படும் பொது மலசலகூட தொகுதியின் கழிவகற்றல் முறையாக மேற்கொள்ளாமையால் பொதுமக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் குறித்த விடயம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதை அடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது –

அண்மையில் குறித்த மலசலகூட தொகுதி நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட நிலையில் அது மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருந்தது.

ஆனாலும் குறித்த மலசலகூடத் தொகுதியானது தினமும் யாழ் நகருக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களின் பாவனைக்காக பயன்படுத்தப்படுவதால் அது துரித கதியில் நிரம்பும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மலசல கூட தொகுதியை பராமரிக்கும் மத்திய பேருந்து நிர்வாகத்தினர் குறித்த கழிவுகளை அகற்றுமாறு யாழ் மாநகரசபையிடம் கோரியிருந்தது. ஆனாலும் அது முறையாக மேற்கொள்ளப்படாத நிலை காணப்பட்டது. இதனால் அண்மைய வாரத்தில் பல தினங்கள் குறித்த மலசலகூடத் தொகுதி பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பின்னர் ஒருவாறு யாழ் மாநகர சபையினர் சிறிய ஒரு கலிபவுசர் மூலம் குறித்த கழிவுகளில் ஒரு சிறு பகுதியை 1300 ரூபா அறவீட்டுடன் அகற்றியுள்ளனர் இது முழுமையாக அகற்றப்படாமையால் சில மணி நேரத்தில் அது மீண்டும் நிரம்பும் நிலை காணப்படுகின்றது. இதை பெரிய கலிபவுசர் மூலம் அகற்றுமாறும் நாளாந்தம் இரண்டுக்கும்  மேற்பட்ட தடவைகள் அதை அகற்றுமாறும் பேருந்து சாலை நிர்வாகத்தினர் மாநகரிடம் கோரியும் அது நடைமுறைப்படுத்தாமையால் குறித்த மலசலகூடம் நிரப்பிய நிலையில் அடிக்கடி மூடும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்களால் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் மக்களது அவசிய தேவையை கருத்தில்கொண்டு மாநகரசபை ஆணையாளருடன் இது தொடர்பில் பேசியதை அடுத்து உடனடியாக கழிவுகள் அகற்றப்பட்டதுடன் பொதுமக்கள் பாவனைக்கும் அது திறந்துவிடப்பட்டது.

இதனிடையே குறித்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக யாழ். மாநகர ஆணையாளருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு - டக்ளஸ் தேவானந்தா எம...
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
இன்றைய உங்கள் எழுச்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் - பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் ...