E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!

Monday, November 7th, 2016

 

ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட புலிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தமிழ் அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையிலேயே அவர்களது தற்பாதுகாப்பிற்காக கடந்த கால அரசுகள் ஆயுதங்களை வழங்கியிருந்தன. அவ்வாயுதங்கள் 2002 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் போர்நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் அரசிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டன. நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (11) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் இயக்கம் உட்பட பல இயக்கங்களுக்கு அன்றைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியிருந்தது. ஈ.பி,ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈரோஸ், மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற இயக்கங்களுக்கு அப்போது ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அவற்றை அவர்கள் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா  ஏனைய தமிழ் இயக்கங்களைப்போல நாம் புலிகள் இயக்கத்தை  தேடி அழிக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dd

Related posts: