முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

Thursday, December 23rd, 2021

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதுமாத்தளன் பகுதியில் மாத்தளன் வீதியை ஊடுருவிச் செல்லுகின்ற சாலை களப்பினை பர்வையிட்டுள்ளார்.

மாத்தளன் வீதிப் புனரமைப்பின் போது,  களப்பினுள் வீழ்ந்த கற்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இன்மையினால் குறித்த பகுதியில் மீன் பிடிப்பதற்கு முடியாமல் இருப்பதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு இன்று நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை துப்பரவு செய்து ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

முல்லைத்தீவு, நாயாறு களப்பு பிரதேசத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக வீதி விளக்குகளை பொருத்துவதற்கு  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் விரைவில் அவற்றை பொருத்தி முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாயாறு களப்பை நம்பி வாழ்த்து வருகின்ற சுமார் 400 குடும்பங்கள் கொடுவாய் மீன்பிடி மற்றும் இறால் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், பொருத்தமான இடங்களை தெரிவு செய்து இறால் வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுத் கொள்ள முடியும் எனவும் பிரதேச கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நாயாறு களப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள்  தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் -  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தே...
வடக்கு - கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் ...
வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி - கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட ...