அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Friday, December 18th, 2020

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும்  குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடனுக்கு கடன் பரிகாரமாகாது -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந...
நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் ...