14 தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் நாளை யாழ்ப்பாணம் வருகை!

Sunday, August 24th, 2025


இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் 14 பேர் நாளையதினம் தனியான படகில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்படுகின்றனர்.

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வருகை தரும் படகில் இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைமையில் படகு உரிமையாளர்கள், இயந்திர திருத்துநர்கள் உள்ளிட்ட குழுவினர் வருகை தருகின்றனர்.

நடுக் கடலிற்கு வருகை தரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகம் வரையில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகை தரும் தமிழக மீனவர்கள் மயிலிட்டி உள்ளிட்ட இடங்களில் தரித்து நிறகும் தமிழக மீனவர்களின் படகுகளை பார்வையிடவுள்ளனர்.

Related posts: