உலக பாடசாலை உலக உணவுத் திட்டத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கும் எதிர்பார்க்கின்றொம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை!

Saturday, October 21st, 2023

கடந்த 76 வருடங்களாக இலங்கை அரசாங்கம் முதலாம் தரத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகின்றமை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 300 சர்வதேச பாடசாலைகள் ,110 தனியார் பாடசாலைகள் என்பன உட்பட 10,135 அரச பாடசாலைகளில் இலவச கல்வி வழங்கப்படுகின்றது.

இலவச கல்வியைப் பெறும் 4.1மில்லியன் மாணவர்களுக்கு இலவச பாடநூல், பாடசாலை சீருடை போன்றவை வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் பெரிஸ் நகரில் இடம் பெற்ற உலக பாடசாலை உணவு நிகழ்ச்சி திட்டத்தின் அதாவது சர்வதேச மாநாட்டில் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தள்ளார்.

உலக உணவுத் திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற இச்சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாடசாலைகளில் பெருமளவான மாணவர்களுக்கு பாடசாலைகளில் பகலுணவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் இப்பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பகலுணவு பெறும் மாணவர்களின் தொகை மேலும் அதிகரிப்பதற்கு அவசியமான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக அவதானம் செலுத்துவதாகவும் தெளிவுபடுத்தினார்.

அதற்கிணங்க 2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கியதாக பாடசாலை பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை பரவலாக்குவதற்கு எதிர்பார்ப்பதுடன், 2023 இல் 4.1 மில்லியன் தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்கள் உள்ளடங்களாக இலவச பகலுணவு விநியோகிப்பதாகவும், அதற்கான வரவு செலவுத் திட்டத்தில் 204 மில்லியன் வரை ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்கிணங்க அடு‌த்த ஆ‌ண்டில் அரசாங்க பாடசாலைகளுக்கான போசாக்கு உதவி நிதியத்தை நிறுவுவதுடன்அதற்கு அவசியமான சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள கொள்கை தீர்மான சட்டமூலத்தை அமுல்படுத்துவது தொடர்பாக தற்போது சட்டமூல திணைக்களத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID) இந்த தேசிய பிரிவு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி இப்பாடசாலை போஷாக்கு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்படுவதுடன் எதிர்காலத்திற்கும் சிபாரிசு செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு நாடாக பல்வேறு முயற்சிகள் மற்றும் இடையூறுகளுக்கு முகம்கொடுத்து இப்பகலுணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் எமது நாட்டு மாணவர்களுக்காக சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கிணங்க தயாரிக்கப்பட்ட நிருவாக மற்றும் நாட்டின் கல்வி நிருவாக உத்திகள் இரண்டையும் சமமாக செயற்படுத்துவதனால் மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு முகாமைத்துவ முறைமைக்கு இணங்க இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக மேற்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றைத் தயாரித்துள்ளதாக அமைச்சர் விபரித்தார்.

அவ்வாறே அடுத்த சுகாதாரப் பரிசோதனைகளின் ஊடாக மாணவர்களின் போஷாக்குத் தேவையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் இலங்கையின் கல்வி அறிவு 93%வீதமாகக் காணப்படுவதுடன் ஐந்து வயதைப் பூர்த்தி செய்யும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் விகிதம் 99% வரை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்திற்கு இந்நலன்புரி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் இம்மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அத்துடன் உலக உணவுத் திட்டத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் வலியுறுத்தினார்.

000

Related posts: