என்மீது நம்பிக்கை வையுங்கள் – நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எமது நோக்கம் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022

தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே தனது நோக்கம் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ பகுதியில் விவசாயிகளை சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இயற்கை உரம் தொடர்பிலான தெளிவூட்டல்கள் சரியான வகையில் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விவசாய அறுவடைக்கு இராணுவத்தை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில விவசாயங்களுக்கு செயற்கை உரம் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வாறான விவசாய நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி – வெலிகம்பொல பிரதேசத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: