நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்வதிலும் எதிர்காலத்தில் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் – சூழலியலாளர்கள் வருத்தம்!

Saturday, April 28th, 2018

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையை அடுத்து நீர்நிலைகளில் நீர் வற்றிப் போவதனால் நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் எதிர்காலத்தில் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுவதாக சூழலியலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நாட்களில் வெயிலுடன் கூடிய உஷ்ணநிலை அதிகரிக்குமானால் வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதனால் மக்கள் குடிநீருக்கு மட்டுமன்றி இதர தேவைகளுக்கும் நீரைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர் நோக்குவார்கள். குறிப்பாக விவசாய செய்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் கால்நடை வளர்ப்போரும் பல பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடலாம்.

இந்நிலையில் மக்கள் தமது பயன்பாட்டிற்கான நீரை சிக்கனமாக பயன்படுத்தும் அதே வேளை வீண் விரயம் செய்ய வேண்டாமென்று சூழலியலாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தற்போது வறட்சியான சூழலில் வடபகுதியில் நீர்த்தட்;டுப்பாடு காரணமாக குழந்தைகள், சிறுவர்கள் முதலானோர் பல்வேறுப்பட்ட நோய் தாக்கங்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் இந் நிலை தொடருமானால் மேலும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும்.

மன்னார், கிள்நொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வடபகுதியிலுள்ள 5 மாவட்டங்களிலும் குடி நீரை nபெற்றுக் கொள்ளும் முகமாக வௌ;வேறு இடங்களுக்கு செல்வதனை காணும் அதே வேளை கால்நடைகளும் குடிநீர்கள் இன்றி நீர் நிலைகளினை நாடிச் செல்வதினை காணமுடிகிறது.

இந்நிலையினைக் கருத்திற் கொண்டு மனித வாழ்வுக்கு ஆதாரமான நீரை பாதுகாக்குமாறும், நீரை அநாவசியமான விதத்தில் வீண்விரயம் செய்ய வேண்டாமென பொதுமக்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் கடும்வறட்சி மற்றும் உஷ்ணம் காரணமாக வழமைக்க மாறான மாற்றம் ஏற்பட்டால் அது தொடர்;பாக உடனடியாக வைத்திய ஆலொசனையை பெற்றுக் கொள்ளுமாறு சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Related posts: