காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும்!
Monday, July 22nd, 2019
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை - தொழில்நுட்ப அமைச்சு அறிவிப்பு!
திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடிய...
|
|
|


