தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை – தொழில்நுட்ப அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 30th, 2022

மின்சாரம் தடைப்படும் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்ய தேவையான டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு கோபுரங்களைச் செயற்படுத்துவதற்காக 3,000 லீற்றர் டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவதற்க்காக நேற்று விடுவிக்கப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்வெட்டு நீடிப்பதால், பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இதன்படி, தொலைபேசி கோபுரங்களை ஜெனரேட்டர் கொண்டு இயக்குவதற்கு தேவையான எரிபொருளை எந்த நேரத்திலும் வெளியிடுவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: