கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021

அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் அடிப்படையில் அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமை  என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பௌத்தர்களின் இந்த உயர்ந்த பண்பினை உலகிற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசாக பூராணை தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்’.

குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து உலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் பௌத்த பாரம்பரியமாகும்.

கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும், உலகளாவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக, சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் கூட்டு சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் மூன்று உன்னத விழாக்களை நினைவுகூர்ந்து தத்தமது வீடுகளில் தங்கியிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு அதனை தடையாக கொள்ளத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் விசாக பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் எனவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை - சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அரச தல...
தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி - அமைச்சர் சரத் வீரசேகர ச...
எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்...