நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிடும் அமெரிக்க பிரதிநிதிகள் !

Wednesday, October 9th, 2019


யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் பளை பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், நிலக்கண்ணி அகற்றும் நிறுவனம் ஒன்று இந்தப் பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பலாலி பிரதேசங்களில் இராணுவத்தினரும், எல்ரிரிஈ அமைப்பினரும், பாதுகாப்பு வலயங்களை அமைத்திருந்ததனால் அந்தப் பிரதேசங்களில் அதிகளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் காணிகள் மற்றும் மக்கள் முன்னர் குடியிருந்த பகுதிகளில் தற்சமயம் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகளின் இந்த கண்காணிப்பு விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: