சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கை எடுக்கவேண்டும்

Monday, June 5th, 2017

இலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சுயாதீன மனித உரிமைகள் காப்பு அமைப்பு ஒன்று இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது அதில், இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்டம் ஒழுங்கு உரியமுறையில் அமுல்படுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது

இந்தநிலையில் கடந்த காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான தாக்குதல்களும் அது தொடர்பில் பின்னர் விசாரணைகள் நடத்தப்படாமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றமிழைத்தவர்களை கைதுசெய்து தண்டனை வழங்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பம் கோரியுள்ளது

Related posts: