2ஆம் கட்ட பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்!

Monday, January 7th, 2019

நடைபெற்றுமுடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக, 4 பாடசாலைகள் நாளை(08) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு இசிப்பத்தன கல்லூரி, மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம், களுத்துறை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் மகளிர் பாடசாலை ஆகிய பாடசாலைகளே மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 21 பாடசாலைகளில் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதுடன், பாடசாலைகளின் ஒரு பகுதி மாத்திரம் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி, தமிழ்மொழி மூலமான மத்திய நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:

போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் - தீ வைப்பது இலகுவானது, அதனை மீளக் கட்டியெழுப்புவது க...
அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்!
இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை - நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல்...