மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 30 மில்லியன் முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துதுள்ளார்.

எவ்வாறாயினும், அதிக அளவு இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. அதன்படி, முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இதுவரை மொத்தம்

Related posts:


சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர்...