1000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Saturday, April 10th, 2021

1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை உடக வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பள அதிகரிப்பில் 900 அடிப்படையாகவும் வரவு செலவு திட்ட கொடுப்பனவாக 100 ரூபாயும் சேர்த்து 1000 ரூபா வாங்கப்படுகிறது. 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும்.

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கைக்கு அமைவாக 1000 ரூபா வழங்கப்ப வேண்டும் ஒருசில தோட்ட நிர்வாகங்கள் தேயிலை பறிக்கும் அளவை அதிகரித்தமை இது தொடர்பாக எங்களது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் பெருந்தோட்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு எட்டப்பட்டது.

இதேவேளை ஏழு வருடங்களுக்கு முன்னரே தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது இந்த 1000 ரூபா எங்களது இலக்கல்ல இதற்கு மேலாக தோட்ட தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே எங்களது இலக்கு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: