விரைவில் கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை!

Thursday, October 5th, 2017

கொழும்பு – தூத்துக்குடி இடையில் இந்திய இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதற்கும், கலாச்சார பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துதற்கும் வர்த்தக சுற்றுலா மற்றும் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் .

இதற்கமைவாக கொழும்பு மற்றும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான திட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட கேள்வி மனுவிற்கான (EOI) விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இது தொடர்பில் உரிய பெறுபேறு கிடைக்கவில்லை.

இந்த திட்டத்திற்கு தற்பொழுது இடம்பெற்றுவரும் கேள்வி மனு நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கும் புதிதாக கேள்வி மனு விண்ணப்பத்தை கோருவதற்கும் பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்தவற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Related posts: