வாக்காளர்கள் வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு புதிய முறைமை – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, November 12th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்
இதன்படி இதுவரை 97% உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள், தமது பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு ஏதுவான, நிகழ்நிலை முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ‘On-line Registration’. என்ற இணைப்பின் மூலம் வாக்காகளர் அட்டைகளை பார்வையிடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
புற்றுநோய்க்காக நிதியுதவி கோரியுள்ள மஹேல!
ஏப்ரல் இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு - நெடுஞ்ச...
|
|
|


