வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி!  

Tuesday, June 3rd, 2025

வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் திங்கட்கிழமை (02) குறித்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை அவர்கள் பரிசீலித்ததுடன், வர்த்தகம், வணிகம் மற்றும் திறனறிவு மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளையும் கலந்துரையாடினர்.

அத்துடன் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கான புதிய துறைகளை ஆராயும் பணி குறித்த செயல்பாடுகளையும், இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

000

Related posts:


2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
ஐநாவின் புதிய பிரேரணையை பிரித்தானியா வழிநடத்தியிருப்பது நட்பற்ற செயல் - வெளியுறவு அமைச்சர் தினேஷ் கு...
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...