ஐநாவின் புதிய பிரேரணையை பிரித்தானியா வழிநடத்தியிருப்பது நட்பற்ற செயல் – வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 15th, 2021

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கையின் இறையாண்மையை மீறும் ஒன்றாக உள்ளதென்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறுகையில் –

இதை பிரித்தானியா வழிநடத்தியிருப்பது ஒரு நட்பற்ற செயல் என்றும் குறிப்பிட்டார். கொமன்வெல்த் உறுப்பு நாடான இலங்கை மீது இங்கிலாந்து மேற்கொண்ட நட்பற்ற செயலாகும் என்றும்  வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையால் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய தீர்மானத்தில் கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான ஆட்சேபனை பிரிவை நீக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: