2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் – மதுவரித் திணைக்களம் தகவல்!

Monday, February 8th, 2021

2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானத்திற்காக 60 வீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வரித் தொகை பின்னர் நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மது பாவனையாளர்கள், மதுபான கொள்வனவிற்காக மேலதிகமாக 40 வீதமான பணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, உரிய முறையில் கணிப்பிடும் பட்சத்தில், 2020 ஆம் ஆண்டு மதுபாவனையாளர்கள், மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளனர்.

முன்பதாக 2020 ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்திற்கு 12,000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உற்பத்தி வரி உள்ளிட்ட பல்வேறு வகையிலான வரி, இந்த வரி வருமானத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டு மது பாவனையாளர்களினால் மது பயன்படுத்தப்பட்ட சரியான தொகையை கணிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: