மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த  குரங்கு!

Thursday, August 7th, 2025

மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூலாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக் காயப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்று புதன் கிழமை குறித்த பூங்காவுக்கு சிறுமி தனது பெற்றோருடன் விளையாடுவதற்காக சென்று உள்ளார். 

அங்கு கூட்டினில் அடைக்கப்பட்ட குரங்கை சிறுமி பார்வையிட்டபோது குரங்கு சிறுமியை தாக்கியுள்ளது.

 சிறுமியை  யாழ்  போதுனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற தந்தையாரிடம் குரங்குக்கு தடுப்பூசி  போடப்பட்ட புத்தகத்தை பெற்று வருமாறு வைத்திய சாலையில் தெரிவிக்கப்பட்டது. 

தந்தை மானிப்பாய் பிரதேச சபைக்கு சென்று பூங்காவில் தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவத்தை கூறி குரங்குக்கு போடப்பட்ட தடுப்பூசி அட்டையை தருமாறு கேட்ட  நிலையில் இந்த வருடத்துக்கான தடுப்பூசியை போடவில்லை என பதில் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் அதிகம் சென்றுவரும் குறித்த சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படும் குரங்குக்கு தடுப்பூசி போடப்படாமலும்  பாதுகாப்பற்ற முறையில் வழங்கப்படுவது தொடர்பில் சிறுமியின் தந்தை குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் கண்டனத்தையும் வெளியிட்டார்

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குரங்கு சுமார் 10 வருடங்களாக அங்கு காணப்படுவதாக தெரிவித்ததுடன்  தடுப்பூசி போடப்படாமை உண்மை எனவும்  தெரிவித்தார்

Related posts: