மக்கள் அணிதிரளும்  பட்சத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் அழைப்பு!

Sunday, October 27th, 2024

சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மக்கள் எம்மோடு அணிதிரளும்  பட்சத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அழைப்பு விடுத்தார்.

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மறவன்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுமர போதே இவ் அழைப்பினை விடுத்திருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது..

தமிழர் அரசியல் தரப்பில் எவருமே இதுவரை செய்திராத பல விடயங்களை இணக்க அரசியல்  வழிமுறையின் ஊடாக கடந்த கலத்தில் நாம்  சதித்துக் காட்டியுள்ளோம்.

எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வீணைச் சின்னத்தின்கு கணிசமான வாக்குகளை எமக்கு வழங்கி 4 அல்லது 5 ஆசனங்களை தரும்பட்சத்தில், குறித்த மக்கள் ஆணையை பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.
000

Related posts:


அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்...
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...