பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,..
Monday, December 9th, 2024
( தொடர் 2)
தோழமையுடன்
அன்பு நிறைந்த வணக்கம்!,…
மறுபடியும் ஒரு மடலில்
உங்களுடன் நான்,..
அறியாமை என்பது அடர்ந்த காட்டிருள்.
எமது புனித இலட்சிய பயணத்தில்
அறியாமை என்ற இருளில் திக்கற்று நின்றவர்களை
அறிவொளி ஊட்டி சரியான திசைவழிக்கு அழைத்து வந்திருக்கிறோம்.
அவதூறு என்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு,..
கடந்த காலங்களிலும் அவதூறுகள் மட்டுமன்றி அக்கிரமங்களும்
அச்சுறுத்தல்களும் மட்டற்ற அளவில் எம்மை சூழ்ந்து நின்ற வேளையிலும்
காட்டாற்று வெள்ளம் போல் அவற்றை நாம் கடந்து வந்தவர்கள்,..
நான் கூறும் கருத்துக்கள் குறித்து அறியாமையின் காரணமாக
மாற்றுக்கருத்துக்களை முன்வைவைப்பவர்களுக்கு மட்டும் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன்,.
அவைகளை அவ்வப்போது நான் கூறிக்கொள்வேன்,.
ஆனாலும்,. அவதூறுகளை கடந்த காலங்களைப்போல்
கண்டும் காணாமல் கடந்து செல்லவே நான் விரும்புகிறேன்,..
யாரும் கற்களை வீசினாலும், அவைகள் பூக்களாகவே என் மீது வந்து விழும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இயற்கையின் அழிவுகள்
இப்போது உங்கள் மீது அவலங்களை சுமத்தி வருகின்றன,..
அது கண்டு நான் துயரமடைகிறேன்,..
எமது மக்களுக்கான ஆயுதம் ஏந்திய உரிமைப்போராட்டத்தில்
நான் களமிறங்க முன்னர்,..
மனித நேயப்பணிகளிலேயே நான் ஈடுபட்டிருந்தவன்,.
மக்கள் தொண்டனாகவே நான் களமிறங்கி நின்றிருந்தவன்.
அப்போதிருந்த தொண்டு நிறுவனம் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்,..
(ரி ஆர் ஆர் ஓ)
அந்த அமைப்பின் ஸ்தாபகர் எனது பெரிய தந்தையும் வளர்ப்பு தந்தையுமான தொழிற்சங்கவாதி கே. சி நித்தியானந்தா அவர்கள்.
அந்த ரி ஆர் ஆர் ஓ அமைப்பில் நான் முதன்மை உறுப்பினராக தொண்டாற்றியவன்,..
1977 இல் தமிழ் மக்கள் மீது
திட்டமிட்ட இனவெறித்தாக்குதல்
தூண்டி விடப்பட்டது,..
தலைநகர் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டு அந்தரித்து நின்ற மக்களை
பாதுகாக்கும் களப்பணியில்
ரி ஆர் ஆர் ஓ அமைப்பின் ஊடாக நான் ஈடுபட்டிருக்குறேன்,..
பாடசாலைகளில் தமிழ் மக்களை பாதுகாத்து வைத்து
அவர்களை லங்காராணி என்ற
கப்பலில் ஏற்றி வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பி வைத்த
எனது மனிதாபிமானப்பணிகளையும்
இதில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1978 இல் பாரிய சூறாவளி வெள்ள அழிவொன்றை கிழக்கு மாகாண மக்கள் சந்தித்திருந்தனர்.
மக்களின் அவலம் அறிந்து கொழும்பில் நிவாரணப்பொருட்களை சேகரித்து,..
அவைகளை கிழக்கு மாகாணம் நோக்கி நானும் சென்று அவலம் தீர்த்து களப்பணிகள் ஆற்றியவன்,..
அப்போதும், அதற்கு பின்னரும் பல தடவைகள் இயற்கை அனர்த்தங்களால்
மக்கள் படும் அவலங்களை மக்களோடு நானும் நேரில் நின்று பட்டுணர்ந்தவன்,..
இன்று நீங்கள் அவலத்தில் தவிக்கின்றோம் என எனக்கு செய்திகள்
அனுப்பும் போது,..
அந்த வேதைனை மிகுந்த அவலத்தை மக்களோடு மக்களாக நின்று
நானும் அனுபவித்தவன் என்ற வகையில்
உங்கள் மனத்துயர்களை நான்
ஆழமாக உணர்கிறேன்,.
சுனாமிப்பேரலையின் பேரழிவுகளை நீங்கள் சந்தித்த போது கூட
நான் சந்திரிகா அரசின் ஆட்சியில் பங்கெடுத்திருந்தவன்,.
பேரழிவுகளில் இருந்து மக்களை மீட்க
புலிகள் அமைப்பு சுனாமிக்கட்டமைப்பை தருமாறு
சந்திரிகா அரசிடம் கேட்டிருந்தது,..
சந்திரிகா அரசு பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை புலிகள் அமைப்பிடம்
வழங்க இருந்தது.
நான் அதற்கு ஆதரவு வழங்கியவன்.,,
நான் அரசியல் ரீதியில் புலிகளை வெளிப்படையாகவே
விமர்சித்தாலும்
எமது மக்கள் சுனாமி பேரழிவில் இருந்து மீள்வதற்கான
நிர்வாக கட்டமைப்பை
ஆதரித்தவன்,௪
சுனாமிப்பேரழிவில் இருந்து எமது மக்களை மீட்பதற்கான
பெரு நிதி அந்த கட்டமைப்பின்
ஊடாக வழங்கப்பட இருந்தது,..
இன்று புலிகள் அமைப்பின் பெயரை
தமது சுயலாப அரசியலுக்கு பயன்படுத்துவோர் கூட
அந்த சுனாமி கட்டமைப்பை
புலிகளிடம் கொடுப்பதை
எதிர்த்திருந்தனர்,..
அந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்
எமது அரசியல் முரண்பாடுகளை
ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு
எமது மக்கள் நலன் சார்ந்து
அதை நான் ஆதரித்திருந்தேன்,..
துரதிஷ்டவசமாக அது வழங்கப்பட்டிருக்கவில்லை,..
ஆனாலும் வாடிய பயிர்களை கண்டு நானும் வாடியிருக்காமல்
வாட்டமுற்ற மக்களின் துயர் துடைக்க எனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தை முடிந்தளவு பயன் படுத்தியிருந்தேன்.,,
அதன் பின்னரான இயற்கை அழிவுளின் போதும்
ஆட்சிகளி பங்கெடுத்து மக்களின் அவலம் தீர்த்திருக்கிறேன்,..
இன்று நீங்கள் இயற்கை அழிவை சந்தித்திருக்கையில்
நான் அதிகாரத்தில் இல்லை,..
எமது மக்களாகிய நீங்கள்
பேரழிவுகளையும் பெருந்துயர்களையும்
சுமந்து கடந்து வந்தவர்கள்,௪
இதையும் கடந்து செல்வீர்கள்
அனைத்து துயர்களையும் வெல்வீர்கள்,..
இந்த நம்பிக்கை எனக்கு உண்டு,௪
காலம் ஒரு செங்கோலை
நம் கையில் தரும்!,..
நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
உங்கள் வெற்றிக்கு நீங்களும் உழையுங்கள்,..
மறுபடியும் மறு மடலில் சந்திப்போம்,..
நாம் செல்லும்
பயணம் வெல்லும்!,..
உண்மை வெல்லும் வரை
உளம் சோரோம்!,..
தோழமையுடன்
உங்கள் அன்பு நிறைந்த
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈ பி டி பி
Related posts: