பிரபாகரனின் சரணடைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 24th, 2021

தேர்தல்களில் மக்கள் எதிர்பார்த்தளவு ஆதரவினை வழங்காத போதிலும் பழிவாங்கும் எண்ணமினறி மக்கள் நலன்களின் அடிப்படையிலே செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரபாகரனின் சரணடைவுகூட தனக்கு பழிவாங்கும் எண்ணத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவான காலத்திலிருந்து அவ் ஒப்பந்தத்தினூடாகவே இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காணமுடியும் என்பதை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

அவ்வாறு நான்  ஏற்றுக்கொண்ட இவ் ஒப்பந்தத்தை ஏனைய சக தமிழ் கட்சிகளும் புலிகள் அமைப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாக்கால்வரையில் எமது மக்கள் உயிருடமை இழப்புகளை சந்திக்கவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

மாறாக பிரபாகரன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு ஜனநாயக வழிமுறைக்க வந்திரந்தால் மக்களுக்கும் பேரழிவு ஏற்பட்டிருக்காது அதேநேரம் பிரபாகரனின் சரணடைவுகூட நடந்திருக்காது.

மேலும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

அதேநேரம் நான் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது முன்னெடுத்து வருகின்றேன்.

அந்தவகையில் நான் முன்னெடுக்கும் எந்தவொரு செற்பாடும் பழிவாங்குவதாகவோ அன்றி பக்கசார்பானதாகவோ இருக்கப்போவதில்லை. மாற்றாக அனைத்தும் எமது மக்களின் நலன் சார்ந்தவையாகவே இருந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்குப்பிட்டி பாலத்தின் ஓரத்தில் இறால் இறுவடை செய்யும் தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்துடன் பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் - நாடாளுமன்றில் சுட்...
எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...
கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டத்தில் செயலாளர் நாயக...