7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா !

Friday, August 7th, 2020

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தவானந்தா 32,146 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்க 7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தமது பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 7 ஆசனங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்

Related posts:

வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்...
நவீன தொழில் நுட்பங்களை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் ...
பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ள...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு அவரது மக்களுக்காக செய்துகொடுக்க தயார...
கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீட...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...