Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_970ed863744670d975f818062a55c9e5, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை! - EPDP NEWS

பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை!

Wednesday, June 10th, 2026

வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வனாத்தவில்லு கரதிவு பகுதியில் உள்ள முந்திரி தோட்டம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் அத்துகோரலகே பிரதீப் சுசாந்த என்ற 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான, கரதிவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டம் அறுவடைக்காக நபர் ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த முந்திரி தோட்டத்தை பாதுகாப்பதற்காக குத்தகைதாரரால் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை தோட்டத்தில் இரகசியமாக நுழைந்து முந்திரி பறிக்க முயன்ற நபர் ஒருவர் மீது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்த நபர் பசியின் காரணமாக முந்திரி பழங்களை பறிக்கச் சென்ற வேளையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வணாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் - நாடாளுமன...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா - பருத்தித்துறை பெண் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் - அரச மருத்துவ அதிகாரிகள...

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!
சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்...
துபாயிலிருந்து நாடு திருப்பினார் ஜனாதிபதி - இலங்கையின் அர்ப்பணிப்பை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய...