ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பு – யாழ் மாநகரின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு – பதவி இழக்கிறார் முதல்வர் ஆர்னோல்ட்’!

Wednesday, December 16th, 2020

பலதரப்பட்ட குறைபாடுகளுடன் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது ஒரு சிலரது தனிப்பட்ட பாதீடாக 2021 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீடு அமைந்துள்ளமையால் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் கடும் எதிர்ப்பை அடுத்து மீண்டும் தோல்விகண்டது.

இதையடுத்து உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் யாழ் மாநகரின் முதல்வர் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

முன்பதாக யாழ் மாநகரின் பாதீடு கடந்த  டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி  சபையில் இடம்பெற்ற போது கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் வாக்கெடுப்பக்கு விடப்பட்டது. இந்நிலையில்  ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் தோல்விகண்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்றையதினம் (16) யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு  இரண்டாவது தடவையாகவும் திருத்தங்களுடன் சபையில் முதல்வர் ஆர்னோல்டால் முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் அவரது திருத்தங்கள் அனைத்தும் கற்பனைகளால் சித்தரிக்கப்பட்ட வரவுகளாகவும் ஒரு சிலரின் தனிப்பட்ட சுயநலன்களுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் முந்தைய இரு வருடங்களும் அவ்வாறானதொரு நிலையே காணப்பட்டதால் மக்கள் பெரிதும் ஏமற்றப்பட்டுள்ளனர் என்றும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டு கடும் விவாதத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் குறித்த பாதீட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் ஆதரவாக 21 உறுப்பினர்களும் எதிராக 24 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இதையடுத்த இரண்டாவது தடவையாகவும் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பாதீட்டுக்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்ரஸ்ஸின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 வாக்களித்துள்ளனனர். அத்துடன்  தமிழரசுக் கட்சியின் 16 உறுப்பினர்களும் ஐக்கியதேசிய கட்சியின்  3 உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர்கள் என 21 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதன்மூலம்  2021 ஆம் ஆண்டுக்கான  பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து உள்ளுர்ராட்சி மன்றங்களின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக யாழ் மாசகரின் முதல்வர் தது பதவியை இழக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: