மீதொட்டமுல்ல சம்பவம் : தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!

Saturday, May 20th, 2017

அண்மையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி ஆராய்வதற்கென ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தத் தனிநபர் ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.இந்த ஆணைக்குழுவிற்று முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கலாநிதி சந்திரதாஸ நாணயக்கார தலைமை தாங்குகிறார்.

குறித்த சம்பவம் பற்றி விரிவான முறையில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் பொறுப்பாகும். மீதொட்டமுல்ல விபத்து பற்றி எழுத்துமூலம் தகவல்களையோ, முறைப்பாடுகளையோ சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் தனிநபர்களையும், சிவில் அமைப்புக்களையும் கேட்டுள்ளார்.

மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவுக்கு இந்தத் தகவல்களையும், முறைப்பாடுகளையும் அனுப்பி வைக்க முடியும்.

முகவரி : செயலாளர், மீதொட்டமுல்ல விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி ஆராயும் குழு நான்காவது பிரிவு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 என்பதாகும்.அடுத்த மாதம் 27ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கபபட்டுள்ளது.

Related posts: