பாடசாலை மாணவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை!

Tuesday, January 26th, 2021

பாடசாலை செல்லும்போது மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய தாங்கள் கற்கும் பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக சென்று கற்க சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தயார் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்ளாமல் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று கற்பிக்க சந்தர்ப்பம் வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிப்பது மிகவும் கடினமான விடயம் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளதுடன் பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: