நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் – இலங்கை குழாம் அறிவிப்பு!

Tuesday, December 24th, 2024

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 பேர் கொண்ட இலங்கை குழாமின் தலைவராக சரித அசலங்க செயற்படவுள்ளார். இந்த அணியில், நுவனிது பெர்னாண்டோ, எசான் மலிங்க ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், அவிஸ்க பெர்னாண்டோ, மகீஸ் தீக்சன, வனிந்து ஹசரங்க ஆகியோர் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம், 8 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

000

Related posts: