என்னைச் சிறையில் அடைக்கச் சதி – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!

Saturday, July 15th, 2017

என்னைச் சிறையில் அடைக்கச் சதி மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த மே மாதம்-08ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புத் தொடர்பாக யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் குற்றப் புலனாய்வு துறையினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த விசாரணைக்கான அழைப்பு வந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான சதியில் முன் நின்றவர்கள் எனும் வகையில் எம்மைச் சிறைக்குள் தள்ளுவதன் ஊடாக முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பச் சதி செய்யலாம். இல்லையேல், தமிழர்களின் தலைமைகள் என கூறிகொண்டிருப்பவர்கள் அரைகுறை அரசியலமைப்பைத் தமிழர்களுக்குத்  திணிக்க முயற்சிக்கையில் அதனைத் தமிழ்மக்களுடன் இணைந்து நாங்களும் எதிர்க்கலாம் எனும் அடிப்படையில் எங்களைச் சிறைக்குள் தள்ளினால்  பிரச்சினை எழாது என்பதற்காகவும் இந்தச் சதி நடக்கலாம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts: