ஆயுட்கால தடையை நீக்ககோரி வழக்கு தொடர்ந்துள்ள ஸ்ரீசாந்த்!

Saturday, March 4th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கிரிக்கெட் விளையாடுவதற்கு தன் மீது விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்ககோரியும், தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் ‘லீக்’ போட்டியில் விளையாட தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரியிருந்த நிலையில், அதற்கு கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்தனாலேயே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில், சூதாட்ட புகாரில் சிக்கியதன் பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்களை சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுவித்தது.

நீதிமன்றம் விடுவித்தாலும் கிரிக்கெட் சபை ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை நீக்கவில்லை. அத்தோடு அண்மையில் அவர் கோரியிருந்த ஸ்கொட்லாந்து லீக் தொடரிலும் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சபையை நிர்வகிக்கும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவிடம் தனது ஆயுட்கால தடையை நீக்ககோரி முறையிட்டார். புதிய நிர்வாக குழுவும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அவர் இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 17-sreesanth34-300

Related posts: