யாழில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

Thursday, May 3rd, 2018

பொன்னாலைப் பிரதேசத்தில் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சமூகச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த அறிவித்தலை மீறிக் கடன் வழங்க முற்படும் நிதி நிறுவனங்களின் பணியாளர்கள் இங்கிருந்து வலிந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது மேற்படி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் புதியவர்களுக்குக் கடன்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் வழங்கிய கடன்களை மென்போக்கான அடிப்படையில் மீள அறவிட வேண்டும் எனவும் இதனை விடுத்துப் புதியவர்களுக்குக் கடன் வழங்க முற்பட்டால் அவர்களைவலிந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் குறித்த சமூகச் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts:

பட்டதாரி பயிலுனர்கள் வேண்டாம்: சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் - தேர்...
அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது - தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதி...