மீண்டும் தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்காவின் எச்சரிக்கை!

Sunday, August 4th, 2019

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாட்டவர்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அந்த நாடு விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொண்டதற்கொலை குண்டு தாக்குதலில் 260 பேர் வரையில் உயிரிழந்தமை குறிபிடத்தக்கது.

Related posts: