நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் மின்சார சபை!

Thursday, August 28th, 2025


…..
புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  

இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தச் செயல்முறைக்கு  நேற்று(27) முதல் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள் அரசின் உரிமையின் கீழ் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய நிறுவனங்களில் உள்வாங்க விரும்பாத ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓய்வு வழங்கப்படும். 

இதற்கிடையில், புதிய நிறுவனங்களில் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளுக்கு, தற்போது இலங்கை மின்சார சபையில் உயர் பதவிகளில் பணியாற்றும் பொறியியலாளர்களை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: