தென்மராட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு!

Friday, November 23rd, 2018

தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களாக குறைவடைந்து காணப்பட்ட டெங்கு, தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில் பெய்த மழையை அடுத்தே டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

டெங்குவின் தாக்கம் கடந்த மாதங்களை விட அண்மைய மழையை அடுத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 20 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் பொதுமக்கள் வழங்கிய பங்களிப்பின் பயனாக டெங்குவின் தாக்கம் குறைவடைந்திருந்தது.

அவ்வாறான நடவடிக்கைகளில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டால் டெங்குவின் அதிகரிப்பைக் குறைக்க முடியும். இதன்படி பொதுமக்கள் தினமும் தமது குடியிருப்புகள் மற்றும் காணிகளில் மழைநீர் தேங்கக்கூடிய நீரேந்து பொருள்கள் காணப்படின் அவற்றை அப்புறப்படுத்துவதுடன் குடியிருப்புகள் மற்றும் காணிகளில் மழை நீர் தேங்கும் இடங்கள் காணப்பட்டால் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: