நாட்டில் 36,000க்கும் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள்!

Wednesday, October 22nd, 2025


…….
நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறினார்.

குறிப்பாக மேல் மாகாணத்தில் – 4,630 வெற்றிடங்களும்

தென் மாகாணத்தில் – 2,513, வெற்றிடங்களும்

மத்திய மாகாணத்தில் – 6,318, வெற்றிடங்களும்

வடமேல் மாகாணத்தில் – 2,990, வெற்றிடங்களும்

ஊவா மாகாணத்தில் – 2,780, வெற்றிடங்களும்

வடமத்திய மாகாணத்தில் – 1,568, வெற்றிடங்களும்

கிழக்கு மாகாணத்தில் – 6,613, வெற்றிடங்களும்

சப்ரகமுவ மாகாணத்தில் – 3,994 வெற்றிடங்களும்

வடக்கு மாகாணத்தில் – 3,271  ஆசிரியர் வெற்றிடங்களுமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் சேவையின் தரம் 3 (ஆ) 1 தரத்தை சேர்ந்த பொறுப்பேற்காத 353 பட்டதாரிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆசிரியர் சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறு ஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

000

Related posts: