மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பிடியாணை!

Wednesday, October 12th, 2016

யாழ்ப்பாணம் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்றைய தினம் இவ் வழக்கானது விசாரனணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.

மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளரை மன்றில் ஆஜர்படுத்துமாறு அவருக்கு பிடியாணை பிறப்பித்து கடந்த வழக்கு தவனையின் போது நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இருந்த போதிலும் இன்றைய வழக்கு தவனையிலும் குறித்த பணிப்பாளர் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து நீதவான் குறித்த பணிப்பாளருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்ததுடன் அதனை கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக நிறைவேற்றவும் உத்தரவிட்டார்.

அத்துடன் கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் அடித்த வழக்கு விசாரனையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு கட்டளை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.

2aebb15d1e90453d9af2bff2d0d03145_L_5

Related posts: