நாடாளுமன்ற தேர்தல்  –  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் ஆரம்பம்!

Wednesday, November 13th, 2024

நாடாளுமன்ற தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.

வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

000

Related posts:

ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் தொடரும் - யாழ். பல்கலை மாணவர் ஒ...
கடல் அரிப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிட...
அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது - முன்னாள் விள...