கடல் அரிப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்கள் கோரிக்கை!

Sunday, May 31st, 2020

கடல் அரிப்பால் தமது கடல் தொழில் நடவடிக்கைகளில் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்றாம்பிட்டி கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மேலதிக இணைப்பாளர் விமல்நாதன் (மதன்) தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர். இதன்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது –

மூன்றாம்பிட்டி கிராமத்தில் கடற்றொழிலை நம்பி 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அப்பகுதியின் துறை கடல் அரிப்பால் காரணமாக குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகுவதால் கடற்றாழில்  உபகரணங்கள் அழிவுறுத் நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில் பல தடவைகள் கடந்த ஆட்சிகாகாலத்தில் இப்பகுதியின் பிரதான ஓர் அமைச்சர்களுடனும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு அணைகட்டி குறித்த பகுதியை தொழில் நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு கோரியிருந்தபோதும் எந்தவித பலனும் கிட்டவில்லை என்று கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கடந்த 1995 ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் வாழும் நிலையில் இதுவரை எதுவித நலன்களும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் தற்போது கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்மை போன்ற ஏழை மக்களின் வாழ்வில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி அவர்களது வாழ்வை உயர்த்திவரும் நிலையில் அவரை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவரூடாக தமது வாழ்வு நிலை மாற்றம்பெறும்  என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச்சந்திப்பின்போது கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கடல் தொழில் சங்க பிரதிநிதிகள் , விளையாட்டு கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கொரோனா தொற்று காரணமாக தமது வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவாய், நண்டு போன்ற கடலுணவு பிடிப்பதே தமது பிரதான தொழிலாக உள்ளதால் அதை அபிவிருத்தி செய்ய அமைச்சர் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டு தருமாறும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளின் நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த பிரச்சினைகளை கொண்டுசென்று காலக்கிரமத்தில் தீர்வை பெற்று தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: