மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Monday, October 16th, 2023

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தலைமையக சுற்றறிக்கை மற்றும் பொலிஸ் நிலையங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நடத்திய விசாரணையில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

மக்கள் முறைப்பாடுகள் தொடர்பான தலைமையக சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்காத 125 வழக்குகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 13 சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, ஒன்பது அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை 19 என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: