அதிக வெப்பநிலை – சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்து!

Tuesday, August 29th, 2023

நிலவும் வெப்பமான காலநிலையின் போது சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வைத்தியர் தீபால் பெரேரா விளக்கமளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் விளக்கமளித்த அவர் மேலும் கூறுகையில் – இந்த காலகட்டங்களில் சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிக வெப்பத்தினால் தோல் நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு குழந்தையையும் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் நீராட செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதால் அந்த பிரதேசங்களில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அசுத்தமான நீரைக் பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: