வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம்!

Tuesday, March 12th, 2024

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளது.

ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கை ரூபாவின் மதிப்பின்படி 3.3 பில்லியன் என அரசாங்கம் கூறியுள்ளது.

அதன்படி, எண்ணெய் கசிவுகளுக்கு இலங்கை கடலோர பாதுகாப்புபடையின் பதில் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் திட்டம், வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கும் திட்டம் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் ஆடை படிப்புகளுக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கும் திட்டம். வடக்கு மாகாணம், வடகிழக்கு மாகாணங்களில் உள்ள கடற்றொழிலாளர் பாதுகாப்பிற்கு ஆதரவு உபகரணம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிகள் வழங்கப்படும்.

மேலும், இந்த உதவியை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் பரிவர்த்தனை ஒப்பந்தம் மற்றும் ஏனைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: