பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Wednesday, October 12th, 2016

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை மற்றும் சட்ட ரீதியான வரைபை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பை வரைவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அக் குழு தனது கலந்தாய்வுகளை பூர்த்தி செய்து, தயாரித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கவென, தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் அவதானிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு, குறித்த வரைபை ஒப்படைக்க அமைச்சரவையின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

parliment-1

Related posts: