பரீட்சையில் முறைகேடு – 119 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தம்!
Monday, December 31st, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காகவே குறித்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இம்முறை 167,907 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிரிக்கெட் வீரர் கொலை: பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவு!
வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
ISIS அமைப்புடன் தொடர்பு: 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!
|
|
|


