கிரிக்கெட் வீரர் கொலை: பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவு!

Thursday, October 13th, 2016

கிரிக்கெட் வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஏழாம் எதிரியை, பன்னாட்டுப் பொலிஸாரின் (இன்ரபோல்) கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதிஈ கிரிக்கெட் வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிநைதண்டணை விதித்து யாழ்.மேல் நீதிமன்று தீர்பளித்தது. இதில் குற்றவாளியாக மன்றினால் அறிவிக்கப்பட்ட வழக்கின் 7ஆவது எதிரி இல்லாமலேயே வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச சட்டத்தரணி யாழ்.மேல் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் அணைத்து 3ஆவது குற்றவாளியான கிரிகேசனைக் கைது செய்வதற்கு பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியைக் கோர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கிரிகேசன் இல்லாமலேயே வழக்கு நடைபெற்றது. மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும், இன்ரபோல் ஊடாக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னணி

செங்குந்தா விளையாட்டு மைதானத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது கிறிஸ்தோபர் பிரேமன்(வயது 21) கிரிக்கெட் வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்;டார். அருயானந்தம் சோபஸ், இராஜ குலேந்திரன்  நிசாந்தன், வீரையா ஜெயப்பிரகாஸ், ஜெயலத் எமில்டன், இராஜேஸ்வரன் சப்தஸ்வரன், அமிர்தலிங்கம் விதன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய 7 எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால்  யாழ்.மேல் நீதிமன்றத்தில் பொது எண்ணத்துடன் கொலை செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எதிரிகள் 7 பேரும் சட்டவிரோத கூட்டம் கூடி பொது எண்ணத்துடன் ஒன்றுசேர்ந்து கிறிஸ்தோபர் பிரேமனைக் கொலை செய்தனர் உன்று குற்றம் சுமத்தப்பட்டது. அரசு சார்பில் 1ஆவது சாட்சியாக சாட்சியமளித்த அராமகிருஸ்ணன் அகில்ராஜ், 1ஆம் எதிரி சோபஸ் கொள்ளப்பட்ட பிரேமனுக்கு கறுத்த கொட்டான் பொல்லால் தலையில் அடித்ததையும், 7ஆம் எதிரி கிரிகேசன் இறந்த பிரமேனுக்கு விக்கெட்டால் வயிற்றில் அடித்ததையும் நேரில் கண்டதாக சாட்சியமளித்தனர். பிரேமன் காயமடைந்து நிலத்தில் சரிந்தார். மைதானத்தில் விழுந்து கிடந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்கித்தபோது அந்த வழியால் வந்த 2 முச்சக்கர வண்டிகள் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டன. வயோதிபர் ஒருவருடைய முச்சக்கர வண்டியிலேயே அடி காயங்களுக்கு ஆளான பிரேமனை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தேன் என்று குறிப்பிட்டார். 7 நாட்கள் கோமா நிலையில் இருந்த பிரேமன் பின்னர் உயிரிழந்தார். விசாரணைகளின் முடிவில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் 1ஆம் எதிரி சோபஸ் 2ஆம் எதிரி நிசாந்தன், 7ஆம் எதிரி கிரிகேசன் ஆகியோரை யாழ்.மேல் நீதிமன்று குற்றவாளிகளாக இனங்கண்டது. 3அவது எதிரி ஜெயப்பிரகாஸ், 4ஆம் எதிரி எமில்டன், 5ஆம் எதிரி சப்தஸ்வரன், 6ஆம் எதிரி விதன் ஆகிய 4பேருக்கும் எதிராக வழக்கு தொடுனர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் கொலைக் குற்றச்சாட்டை எண்பிக்க தவறினார் என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்றம் நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்தது. இறந்தவரை எதிரிகள் தாக்கிய போது அங்கிருந்த பிரேமனின் அணி உறுப்பினர்கள் அவரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு அருகில் செல்ல அனுமதிக்காத வகையில் 2ஆம் எதிரி நிசாந்தன் அந்த உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதேநேரம் சோபசும் கிரிகேசனும் இறந்தவரை தாக்கியபோது நிசாந்தன் அதைத் தடுக்கவில்லை. நிசாந்தன் முதலில் மைதானத்திறகுள் சென்று விக்கெட்டைத் தட்டிவிட்டு பிரச்சினையை ஆரம்பித்தவராவார். 3 எதிரிகளுக்கும் பொது எண்ணத்துடன் பிரேமனைக் கொலை செய்தார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி எண்பிக்கப்பட்டுள்ளது. 3எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டணை விதிப்பதுடன் மூவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த வேண்டுமெனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டணைத் தீர்ப்பு வழங்கினார்.

4_lVlMlG

Related posts: