ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று (20) இடம்பெற்றது

இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கடந்த வருடம் ருவண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை நிதியளித்தல் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்கள் குறித்தும் இங்கு உரையாற்றப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றை ஏற்படுத்துவதற்காக பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் இலங்கை முன்னிலை வகிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை புலம்பெயர் சமூகத்துடனான மல்போரா இல்ல கலந்துரையாடலின்  (Malborough House  Dailogue) முன்னேற்றம் குறித்தும் செயலாளர் நாயகம் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் பொதுநலவாய செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்   இந்த சந்திப்பில் கலந்துகொண்;மை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை ஏற்க அரசாங்கம் தயார் - பிரதமர் மஹிந்...
கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை - இராணுவத் ...
தொடர் மழை - சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்...